வங்கி கடன் வழங்குவது குறித்து ஆலோசனை கூட்டம்
ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வங்கி கடன் வழங்குவது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம பகுதிகளில் வசிக்கின்ற மாணவர்கள், தொழில் முனைவோர் மற்றும் விவசாயிகள் பயனடையும் வகையில் கல்வி கடன், தொழில் கடன் மற்றும் பயிர் கடன் வழங்குவதற்கு சிறப்பு முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு திருப்பத்தூர் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருண்பாண்டியன் தலைமை தாங்கினார். ஒன்றியத்திற்கு உட்பட்ட மாணவர்கள், தொழில்முனைவோர் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டு கடன் பெற விண்ணப்பித்தனர். முகாமில் ஆலங்காயம் ஒன்றியக்குழு தலைவர் சங்கீதா பாரி கலந்துகொண்டு பேசினார்.
இந்த முகாமில் இந்தியன் வங்கி, ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, விஜயா வங்கி உட்பட அனைத்து வங்கிகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கடனுக்கான விண்ணப்பங்களை பொதுமக்களிடம் பெற்றுக்கொண்ட வங்கி அதிகாரிகள் கடனுக்கு தகுதியுடையவர்களை வங்கிக்கு நேரில் வரும்படி அறிவுறுத்தினர்.