மீனவ பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம்
வேதாரண்யத்தில் மீனவ பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம்
வேதாரண்யம்:
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் வருகின்ற 18-ந் தேதி மீனவர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதை முன்னிட்டு வேதாரண்யம் தாலுகா மீனவ கிராமங்களில், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், மீனவ கிராம பஞ்சாயத்தார்களை நேரில் சந்தித்து மாநாட்டில் கலந்துகொள்வது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தி அழைப்புவிடுத்தார். நிகழ்ச்சியில் வேதாரண்யம் மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம் முருகையன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம், தலைஞாயிறு ஒன்றிய செயலாளர் மகாகுமார், மாவட்ட துணை செயலாளர் ரவிச்சந்திரன், வேதாரண்யம் நகரமன்ற தலைவர் புகழேந்தி, முன்னாள் மாவட்ட பிரதிநிதி பாபு, மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் சேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.