சங்கராபுரத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் தலைமையில் நடந்தது

சங்கராபுரத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் தலைமையில் நடந்தது.

Update: 2022-06-14 17:01 GMT

மூங்கில்துறைப்பட்டு, 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் காவல் உட்கோட்டத்தில் உள்ள சங்கராபுரம், மூங்கில்துறைப்பட்டு, வடபொன்பரப்பி, பகண்டை கூட்டுரோடு ஆகிய போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கான ஆலோசனை கூட்டம் சங்கராபுரத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் தலைமை தாங்கி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில்:-

குற்ற சம்பவங்களில் கைது செய்யப்படும் நபர்களை போலீஸ் நிலையங்களில் வைத்து விசாரிக்கவேண்டும். கைது செய்யப்படும் குற்றவாளிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தால், சிகிச்சைக்காக அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவேண்டும். குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லக்கூடாது. குறிப்பாக குற்றவாளிகளை கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் அனைவரும் கடைபிடிக்கவேண்டும் என்றார். அப்போது திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் உலகநாதன், முருகன், சூர்யா மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீஸ்காரர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்