ஓசூரில் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்
ஓசூரில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அமைப்பு தேர்தல் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஓசூரில் நடந்தது. கூட்டத்துக்கு மேற்கு மாவட்ட தலைவர் எஸ்.ஏ.முரளிதரன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கு.அன்வர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. பிரிவு மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.சி.யுமான தர்மசேனா கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு தேர்தல் தொடர்பாக கட்சியினருக்கு ஆலோசனை வழங்கி பேசினார். கர்நாடக மகிளா காங்கிரஸ் தலைவர் ராதா உமேஷ், தேர்தல் பார்வையாளர்கள் செந்தில், மகாலட்சுமி, காவேரியம்மாள், மாநகர தலைவர் நீலகண்டன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சூர்யகணேஷ், மாவட்ட பொருளாளர் மகாதேவன், துணைத்தலைவர் கீர்த்தி கணேஷ், வட்டார தலைவர் சீனிவாச ரெட்டி, மாவட்ட மகளிரணி தலைவி சரோஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.