தர்மபுரி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம்

தர்மபுரி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு முன்னேற்பாடு குறித்து அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கலெக்டர் திவ்யதர்சினி தலைமையில் நடந்தது.

Update: 2022-06-08 17:20 GMT

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு முன்னேற்பாடு குறித்து அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கலெக்டர் திவ்யதர்சினி தலைமையில் நடந்தது.

பள்ளிகள் திறப்பு

தர்மபுரி மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் வருகிற 13-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் திறக்கப்பட உள்ளன. இதை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் கல்வித்துறை சார்பில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட கல்வி அலுவலர்கள் பாலசுப்பிரமணி, ராஜகோபால், ரவி, கல்வித்துறை அதிகாரிகள் ரவிக்குமார், மஞ்சுளா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கலெக்டர் திவ்யதர்சினி பேசியதாவது:-

தயார் நிலையில்

மாவட்டம் முழுவதும் பள்ளிகள் திறப்பை முன்னிட்டு ஒவ்வொரு பள்ளியிலும் குடிநீர் வசதி, கழிவறை வசதி ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். வகுப்பறைகளில் மாணவ-மாணவிகள் அமரும் இருக்கைகளை தூய்மைப்படுத்தி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பள்ளி வளாகம் முழுவதையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

பள்ளி வளாகங்களில் சுற்றுச்சூழலை சிறப்பாக பராமரிக்க அனைத்து நடவடிக்கைகளையும் கல்வித்துறை அதிகாரிகள் எடுக்க வேண்டும். தேவையான கண்காணிப்பு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்