வாக்குச்சாவடி அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம்
ஆரணியில் வாக்குச்சாவடி அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடந்தது
ஆரணி
ஆரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிந்து வந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு அனைத்து வாக்காளர்களின் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவை செயல்படுத்த வேண்டும் என்பது குறித்த ஆலோசனை கூட்டம் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது.
வருவாய் கோட்டாட்சியர் எம்.தனலட்சுமி தலைமை தாங்கினார்.
அப்போது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என்று வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.
இதில் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் க.பெருமாள், தாசில்தார் எம்.ஜெகதீசன், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் குமரேசன், அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.