விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து அமைப்பினருடன் ஆலோசனை கூட்டம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து அமைப்பினருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-09-16 19:39 GMT

திருப்பத்தூர்

திருப்பத்தூர் நகர் போலீஸ் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் ஊர்வலம் குறித்து இந்து அமைப்பினருடன் போலீசார் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆத்மநாபன் தலைமை தாங்கினார். நகர் இன்ஸ்பெக்டர் கலைவாணி முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் விநாயகர் சிலை உயரம் 10 அடிக்கு கீழ் இருக்க வேண்டும், ஊர்வலம் பழைய வழித்தடத்தில் வரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை போலீசார் விதித்தனர். இதில் இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத், பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பினர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்