கோளாத்தம்மன் கோவில் ஆடித்திருவிழா குறித்து ஆலோசனை கூட்டம்

சோளிங்கரில் கோளாத்தம்மன் கோவில் ஆடித்திருவிழா குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2023-08-11 19:19 GMT

சோளிங்கர்

சோளிங்கரில் கோளாத்தம்மன் கோவில் ஆடித்திருவிழா குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

சோளிங்கர் கோளாத்தம்மன் கோவிலில் நடைபெறும் ஆடித்திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்து வழிபடுவர்.

இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 16-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் பாதுகாப்பு முன்னேற்பாடுகள குறித்து தாசில்தார் ஆனந்தன் தலைமையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து சாமி ஊர்வலம் குறித்த நேரத்தில் செல்ல வேண்டும். அரசு அனுமதி பெறாமல் திருவிழா பேனர்கள் வைக்க கூடாது. பக்தர்களுக்கு தற்காலிக குடிநீர் வசதி, கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும். அசம்பாவிதங்கள் நடைபெறாமல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்