கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2022-11-04 16:41 GMT

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

கார்த்திகை தீபத்திருவிழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் முக்கியமான விழாவாகும். கொரோனா தளர்வுகளுக்கு பிறகு இந்த ஆண்டு இவ்விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் இன்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார்.

கடந்த ஆண்டுகளில் தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியின் போது அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்தில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் காட்சி அளிக்கும் அர்த்தநாரீஸ்வரர் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

அப்போது வி.ஐ.பி.களுக்கும், வி.வி.ஐ.பி.களுக்கும் மட்டுமே கோவில் வளாகத்தில் இருப்பார்கள்.

அர்த்தநாரீஸ்வரர் காட்சி தரும் போது சாமானிய பக்தர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக பக்தர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இடம் ஒதுக்கீடு

ஆனால் ஆலோசனை கூட்டத்தின் போது வி.ஐ.பி.களுக்கு இடம் ஒதுக்கீடு செய்வது, அவர்களின் பாதுகாப்பு ஏற்பாடு, இருக்கைகள் வைப்பது போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் கிரிவலப்பாதையில் வி.ஐ.பி.கள் கிரிவலம் செல்லும் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதனால் ஆலோசனை கூட்டத்தில் இருந்து செய்தியாளர்கள் பாதியில் வெளியில் அனுப்பப்பட்டனர்.

முன்னதாக வழக்கமான முன்னேற்பாடு பணிகளான கோவில் வளாகத்தில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது, கிரிவலப்பாதையில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பேஸ் டிராக்கிங் மென்பொருள் பொருத்துவது,

கிரிவலப்பாதையில் காண்காணிப்பு கோபுரங்கள் அமைப்பது, பக்தர்கள் கிரிவலம் செல்லும் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள், தற்காலிக பஸ் நிலையங்களில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள், தீபத்தன்று பக்தர்களின் வசதிக்கு ஏற்ப பஸ்கள் இயக்குவது போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

14 ஆயிரம் போலீசார்

14 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, கோவில் இணை ஆணையர் அசோக்குமார் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்