விநாயகர் சிலை வைப்பது-கரைப்பது குறித்த ஆலோசனை கூட்டம்
விநாயகர் சிலை வைப்பது-கரைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
தோகைமலை பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வைப்பது மற்றும் நீர்நிலைகளில் எவ்வாறு கரைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர் தலைமை தாங்கினார். தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், விநாயகர் சதுர்த்தியை பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் சிறப்பாக கொண்டாட வேண்டும், களிமண்ணால் ஆனா சிலையை மட்டு வைக்க வேண்டும். பிளாஸ்டிக், தெர்மாகோல் கலவை கொண்டு சிலையை வைக்கக்கூடாது. மேலும் சிலைகளை 3 நாட்கள் மட்டுமே வைத்திருக்க அனுமதி வழங்கப்படும், கூம்பு வடிவிலான ஒலிப்பெருக்கியை பயன்படுத்த கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இதில், விநாயகர் சதுர்த்தி கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.