ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்த ஆலோசனை கூட்டம்
ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
காரியாபட்டி
காரியாபட்டி பேரூராட்சி, பஸ் நிலைய நிழற்குடை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் மழை நீர் வடிகால் அமைப்பதற்கும் உள்ள இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்றுவது சம்மந்தமான ஆலோசனைக்கூட்டம் காரியாபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் செந்தில் தலைமையிலும், செயல் அலுவலர் அன்பழகன், மண்டல துணை வட்டாட்சியர் அழகு பிள்ளை, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பெரிய திருமால், தலையிட சர்வேயர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், வருவாய் ஆய்வாளர் சிவராமன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதால் அந்த பகுதியில் உள்ள நடைபாதை வியாபாரிகள் வேறொரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. தற்சமயம் பஸ் நிழற்குடை பகுதியில் கடை வைத்துள்ள நடைபாதை வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆலோசனை கூட்டத்தில் கவுன்சிலர்கள் சங்கரேஸ்வரன், முனீஸ்வரி இனியவன், சரஸ்வதி பாண்டியராஜன், தீபா பாண்டியராஜன், கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் அம்மாசி, நடைபாதை வியாபாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.