இ-சேவை மைய செயல்பாடுகள் குறித்த கலந்தாய்வு கூட்டம்;தகவல் தொழில்நுட்பவியல் துறை செயலாளர் பங்கேற்பு

இ-சேவை மைய செயல்பாடுகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் தகவல் தொழில்நுட்பவியல் துறை செயலாளர் தலைமையில் நடந்தது.

Update: 2023-02-22 18:45 GMT

நாகர்கோவில், 

இ-சேவை மைய செயல்பாடுகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் தகவல் தொழில்நுட்பவியல் துறை செயலாளர் தலைமையில் நடந்தது.

கலந்தாய்வு கூட்டம்

நாகர்கோவில் கோணம் பகுதியில் புதிய தொழில்நுட்ப பூங்கா அமைய இருக்கும் இடத்தை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை செயலாளர் குமரகுருபரன், கலெக்டர் ஸ்ரீதர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். ஆய்வின் போது அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

இதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் குமரி மாவட்டத்தில் உள்ள அரசின் இ-சேவை மையங்கள் வாயிலாக பட்டா மாற்றம், குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, ஆதரவற்றோர் விதவை உதவித்தொகை சான்றிதழ் பதிவு செய்வது குறித்த பணிகளை துரிதமாக செயல்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை செயலாளர் குமரகுருபரன் மற்றும் கலெக்டர் ஸ்ரீதர் ஆகியோர் கலந்துரையாடினர்.

கூட்டத்தில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராஜேஷ், கேபிள் தனி தாசில்தார் குமாரவேல், அரசு (பி.எஸ்.என்.எல்.) மற்றும் தனியார் நிறுவனங்கள், வருவாய் அலுவலர்கள், ஊரக வளர்ச்சி முகமை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்