வால்பாறையில் போதைப் பொருளை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம்

வால்பாறையில் போதைப் பொருளை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம்

Update: 2023-01-26 18:45 GMT

வால்பாறை

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின் பேரிலும், வால்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு கீர்த்தி வாசன் அறிவுரையின் பேரிலும் வால்பாறை போலீசார் சார்பில் போதைப் பொருள் இல்லாத தாலுகாவாக வால்பாறையை மாற்றுவது தொடர்பாக தங்கும் விடுதிகள், லாட்ஜ், காட்டேஜ் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- வால்பாறை பகுதியில் கஞ்சா விற்பனை இல்லாத நிலையில் வால்பாறை பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் மூலம் கஞ்சா வால்பாறைக்குள் நுழைந்து விடுகிறது. வால்பாறை போலீசார் கடந்த பல மாதங்களாக சிறப்பு குழு அமைத்து கஞ்சா விற்பனையை கண்டறிந்து பலரை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

வால்பாறைக்குள் எங்குமே கஞ்சா விற்பனை செய்பவர்கள் யாருமே இல்லை என்ற நிலையை உருவாக்கியுள்ளோம். வால்பாறை பகுதியில் உள்ள காட்டேஜ், லாட்ஜ், தங்கும் விடுதி உரிமையாளர்கள் தங்குவதற்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் போதைப்பொருள் பயன்படுத்துவது தெரியவந்தால் போலீசுக்கு தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, நகராட்சி ஆணையாளர் பாலு, துணை தலைவர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன், தங்கராஜ் மற்றும் போலீசார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்