குகை வழிப்பாதை அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம்

குகை வழிப்பாதை அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-07-17 18:09 GMT

கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் வழியாக தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே வாகனங்கள் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. இதையடுத்து தவுட்டுப்பாளையம் முதல் பாலத்துறை வரை மேம்பாலம் அமைக்கப்பட்டது.

இதனால் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே இருந்த தடுப்புச்சுவர் உடைக்கப்பட்டு, இரும்பு தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டன. அதனால் அந்த வழியாக எந்த வாகனமும் செல்ல முடியாமல் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால் தவுட்டுப்பாளையத்தில் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே குகை வழிப்பாதை அமைப்பது குறித்து பொதுமக்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு புகழூர் தாசில்தார் தலைமை தாங்கி பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.

அப்போது, பொதுமக்கள் குகை வழிப்பாதை அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தாசில்தார் துறை அதிகாரியிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்