ரேஷன்கடை விற்பனையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம்

சின்னசேலத்தில் ரேஷன்கடை விற்பனையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் பங்கேற்பு

Update: 2023-01-07 18:45 GMT

சின்னசேலம்

ரேஷன் அட்டை தாரர்களுக்கு தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்வது குறித்து ரேஷன்கடை விற்பனையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சின்னசேலம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாராயணன் தலைமை தாங்கி விற்பனையாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார். அப்போது பொங்கல் பண்டிகையை ஒட்டி ரேஷன்அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்க உள்ள பொங்கல் சிறப்பு தொகுப்பை பொதுமக்கள் சிரமப்படாமல் பெறுவதற்கு ரேஷன்கடை எண்ணிக்கைக்கு ஏற்ப பிரித்து கூட்ட நெரிசல் இன்றி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களின் நலன் கருதி பாதுகாப்பு தேவைப்பட்டால் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கினார். இதில் சின்னசேலம் தாசில்தார் இந்திரா, குடிமை பொருள் தனி தாசில்தார் கமலம், முதுநிலை வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன், குடிமை பொருள் தனி வருவாய் ஆய்வாளர் மைதிலி, வட்ட பொறியாளர் நல்லசாமி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கணினி இயக்குனர் பொன்னன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்