ஒருகோடி மரக்கன்றுகள் நடுவது குறித்து விளாத்திகுளத்தில் ஆலோசனை கூட்டம்

ஒருகோடி மரக்கன்றுகள் நடுவது குறித்து விளாத்திகுளத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2022-09-13 16:16 GMT

எட்டயபுரம்,:

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் முதற்கட்ட பணிகள் விளாத்திகுளம், புதூர், எட்டயபுரம் ஆகிய 3 பேரூராட்சி பகுதிகளிலும், மார்த்தாண்டம்பட்டி, வேலிடுபட்டி, கரிசல்குளம், தலைகாட்டுபுரம், ஆற்றங்கரை, எப்போதும்வென்றான், அயன் பொம்மையாபுரம், கீழ விளாத்திகுளம், காட்டுநாயக்கன்பட்டி, வில்வமரத்துபட்டி, பி.மீனாட்சிபுரம், ஆதனூர், கே.சுந்தரேஸ்வரபுரம், ராமச்சந்திராபுரம், டி.சண்முகபுரம், கமலாபுரம் உள்ளிட்ட 29 கிராம ஊராட்சி பகுதிகளிலும் தொடங்கப்பட உள்ளது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று விளாத்திகுளத்தில் உள்ள தனியார் மஹாலில் நடந்தது. கூடுதல் கலெக்டர் வி.சரவணன் தலைமை தாங்கினார். விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன் மரக்கன்றுகள் நடவு செய்து, அதனை பராமரிப்பது தொடர்பாக விளக்கி பேசினார்.

கூட்டத்தில், உதவி வன காப்பாளர் சக்திவேல், வனச்சரகர் கவின், தாசில்தார்கள் சசிகுமார், கிருஷ்ணகுமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், சீனிவாசன், சிவபாலன், பேரூராட்சி செயல் அலுவலர்கள் கணேசன், சந்தரவேல், வெங்கடாசலம், தி.மு.க ஒன்றிய செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள,் பேரூராட்சி தலைவர்கள் ராமலட்சுமி, சூர்யா அய்யன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்