ஊட்டியில் கருத்து கேட்பு கூட்டம்
ஊட்டியில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகள் குறித்து அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார். பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் நிர்வாக இயக்குனரும், வாக்காளர் பட்டியல் பார்வையாளருமான சிவ சண்முகராஜா தலைமை தாங்கி பேசும்போது, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி 01.01.2023-ந் தேதி தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் பணிகள் நடைபெற்று வருகிறது. 1.1.2023-ந் தேதி அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம். முகவரி மாற்றம், பிழை திருத்தம் உள்ளிட்ட அனைத்து திருத்தங்களுக்கு பிறகு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் செம்மையாக வெளியிட அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, ஆர்.டி.ஓ.க்கள் துரைசாமி, பூஷணகுமார், முகமது குதுரத்துல்லா, நகராட்சி ஆணையாளர்கள் காந்திராஜ் (ஊட்டி), கிருஷ்ணமூர்த்தி (குன்னூர்), மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுகி, தேர்தல் தாசில்தார் புஷ்பாதேவி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.