போலீசாருக்கான இடமாறுதல் கலந்தாய்வு
தர்மபுரியில் போலீசாருக்கான இடமாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் 3 ஆண்டுகள் பணிநிறைவு செய்த போலீசார் முதல் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரை உள்ள போலீசாருக்கான இடமாறுதல் கலந்தாய்வு தர்மபுரியில் உள்ள ஆயுதப்படை திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. ஒவ்வொரு போலீசாரும் தனித்தனியாக அழைக்கப்பட்டு கலந்தாய்வு நடைபெற்றது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமை தாங்கி 153 போலீசாருக்கு இடமாறுதல் ஆணைகளை வழங்கினார். இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் குணசேகரன், புஷ்பராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சவுந்தர்ராஜன், ஸ்ரீதர், பெனாசிர் பாத்திமா, இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் அமைச்சு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.