பங்குசந்தை வீழ்ச்சியால் ஆலோசகர் தூக்குப்போட்டு தற்கொலை

பங்குசந்தை வீழ்ச்சியால் இழப்பு ஏற்பட்ட தொகையை கேட்டு மிரட்டியதால் ஆலோசகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-07-22 20:07 GMT

தஞ்சை கீழராஜவீதியில் உள்ள தனியார் வணிக வளாக நிறுவனத்தின் மாடியில் பங்குசந்தை முதலீட்டுக்கான ஆலோசனை அலுவலகம் நடத்தி வந்தவர் பாபுராஜ் (வயது 42). இவருடைய சொந்தஊர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஆகும். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை வந்து அலுவலகம் நடத்தி வந்தார். இவரிடம் பலர் ஆலோசனைகளை கேட்டு அதன் அடிப்படையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாபுராஜ் வர்த்தகம் செய்த பங்குகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் முதலீடு செய்தவர்கள், பாபுராஜிடம் வந்து இழப்பு ஏற்பட்ட தொகையை கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பாபுராஜ் நேற்று இரவு தனது அலுவலகத்திலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தஞ்சை மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த பாபுராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்