கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரம் வழங்கக்கோரி கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-10-06 19:00 GMT

தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரம் வழங்கக்கோரி கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி கட்டுமான தொழிலாளர் நல வாரிய அலுவலகம் எதிரில் மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தீபாவளி போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார்.

மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாவட்ட பொருளாளர் குமுதன், மாவட்ட துணை செயலாளர் முருகன், மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணன், மாவட்ட குழு அந்தோணிசாமி ஆகியோர் விளக்கவுரையாற்றினார். இதில், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் வாசுதேவன், மாவட்ட பொருளாளர் ஸ்ரீதர் ஆகியோர் பேசினர். மாவட்ட துணைத் தலைவர் மதன் நன்றி கூறினார்.

தீபாவளி போனஸ்

ஆர்ப்பாட்டத்தில், தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். பொங்கல் தொகுப்பை முந்திய அரசு வழங்கியதை போல் வழங்க வேண்டும். பெண்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். வீடு கட்டும் திட்டத்தை எளிமைப்படுத்த வேண்டும். பென்சன் மாதாமாதம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்