கட்டிட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பட்டா நிலங்களில் வீடு கட்ட அனுமதி கோரி கட்டிட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-09-26 18:45 GMT

கூடலூர், 

கூடலூர் பகுதியில் சட்டப்பிரிவு- 17 நிலத்தில் உள்ள வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும். வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதியை மாவட்ட கலெக்டர் தலைமையிலான கமிட்டியிடம் பெற வேண்டுமென்பதை ரத்து செய்து பழைய நடைமுறை போல் நகராட்சி நிர்வாகம் வழங்க வேண்டும். தனியார் வன பாதுகாப்பு சட்டத்தில் உள்ள பட்டா நிலங்களில் வீடு கட்ட அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டிட தொழிலாளர்கள் சங்கம், மின் பணியாளர்கள், தச்சு தொழிலாளர்கள் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தொழிலாளர்கள் கூடலூரில் நேற்று பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பேரணி ராஜகோபாலபுரம் பகுதியில் இருந்து தொடங்கி முக்கிய சாலை வழியாக பழைய பஸ் நிலையத்தில் உள்ள காந்தி திடலை அடைந்தது. அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கூடலூர் எம்.எல்.ஏ. பொன். ஜெயசீலன், ஸ்ரீ மதுரை ஊராட்சி தலைவர் சுனில், ஓவேலி பேரூராட்சி துணைத்தலைவர் சகாதேவன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பத்மநாபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர். தொடர்ந்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.


Tags:    

மேலும் செய்திகள்