கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-07-18 18:58 GMT

பெரம்பலூரில் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் கலெக்டர் அலுவலகம் அருகில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். கட்டுமானம் மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

பின்னர் அங்கிருந்து தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் சமூக பாதுகாப்பு திட்ட அதிகாரி பாஸ்கரிடம் கோரிக்கை மனுவை கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் அகஸ்டின் கூறுகையில், கோரிக்கைகளை தமிழக அரசும், தொழிலாளர் நலவாரியமும் நிறைவேற்றாவிட்டால் அடுத்த மாதம்(ஆகஸ்டு) 12-ந் தேதி கட்டுமானம் மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் கோட்டை நோக்கி ஊர்வலமாக சென்று கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம், என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்