கட்டுமான தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டம்

விழுப்புரத்தில் கட்டுமான தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2022-12-04 19:19 GMT

விழுப்புரத்தில் கட்டுமான தொழிலாளர்கள் கூட்டமைப்பு சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழக கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணையாற்றில் மணல் குவாரிகளை அரசு உடனே திறக்க வேண்டும், கட்டுமான பொருட்கள் விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட துணைத்தலைவர்கள் ரவிச்சந்திரன், ஏழுமலை, ஜோதிராஜா, மணிகண்டன், மாவட்ட துணை செயலாளர்கள் அய்யப்பன், சுரேஷ், கிருஷ்ணமூர்த்தி, ஆனந்தபாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்