கட்டிட தொழிலாளி தற்கொலை

கட்டிட தொழிலாளி தற்கொலை

Update: 2022-07-21 13:06 GMT

கோத்தகிரி

கோத்தகிரி அருகே அரவேனு ஜக்கனாரை கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன்(வயது 47). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். 26 வயதான மகன், கோவையில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். 23 வயதான மகள், திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். இதனால் கோத்தகிரியில் குணசேகரன் தனியாக வசித்து வந்தார். மேலும் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். எனினும் தனியாக வசித்து வந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்