வேன் மோதி கட்டிட தொழிலாளி சாவு

தூத்துக்குடியில் மோட்டார்சைக்கிள் மீது வேன் மோதி கட்டிட தொழிலாளி இறந்து போனார்.

Update: 2023-05-11 18:45 GMT

தூத்துக்குடி தெய்வச்செயல்புரத்தை சேர்ந்தவர் விஜய் (வயது 42). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலையில் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். அவர் தெய்வச்செயல்புரம் சந்திப்பு ரோட்டில் வரும் போது, அவ்வழியாக வந்த மினிவேன் எதிர்பாராதவிதமாக விஜய் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட விஜய், வேனை ஓட்டி வந்த பழனி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் விஜய் பரிதாபமாக இறந்தார். பழனிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்