கார் மோதி கட்டிட தொழிலாளி பலி

பள்ளிகொண்டா அருகே கார் மோதி கட்டிட தொழிலாளி பலியானார்.

Update: 2022-10-03 15:45 GMT

கே.வி.குப்பம் தாலுகா லத்தேரியை அடுத்த அரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது 48). கட்டிட தொழிலாளி. இவர் மனைவி பிரியாவுடன் வெட்டுவாணம் அம்பேத்கர் நகரில் உள்ள மாமியார் வீட்டிலேயே வசித்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஊருக்கு அருகே உள்ள ஏரி கரைக்குச் சென்று விட்டு நடந்து வந்து கொண்டிருந்தார்.

தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது ஸ்ரீ பெரும்புதூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வேகமாக வந்த கார் இவர் மீது மோதியது இதில் தூக்கி வீசப்பட்ட மூர்த்தி படுகாயங்களுடன் சாலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அந்த பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்து மூர்த்தியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது மூர்த்தி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்