மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி
ஆம்பூர் அருகே மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலியானார்.
ஆம்பூரை அடுத்த தேவலாபுரம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 22), கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 7 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் இவர் நேற்று சான்றோர்குப்பம் பகுதியில் ஒரு வீட்டில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அருகில் இருந்த உயரழுத்த மின்வயரில் தவறுதலாக கைப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் டவுன் போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.