கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
மேச்சேரி:-
மேச்சேரி அருகே அரங்கனூர் ஊராட்சி பொம்மியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஞானவேல் (வயது 27), கட்டிட தொழிலாளி. திருமணம் ஆகாத இவர், நேற்று காலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார். இதனிடையே வீட்டுக்கு வந்த அவரது குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு தூக்கில் கொண்டிருந்த ஞானவேலை மீ்ட்டு ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த ஞானவேல், மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.