முதியவர் கொலை வழக்கில் கட்டிட தொழிலாளி கைது

தூத்துக்குடியில் முதியவர் கொலை வழக்கில் கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-29 18:45 GMT

தூத்துக்குடியில் முதியவரை கொலை செய்ததாக கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

முதியவர் கொலை

தூத்துக்குடி பழைய துறைமுகம் அருகே சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஒருவர் கடந்த 24-ந் தேதி தலையில் காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்தார். இது குறித்து மத்தியபாகம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது ஒருவர் கல்லால் முதியவரை தாக்கி கொலை செய்து இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்தவர் லூர்தம்மாள்புரத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளியான சாமுவேல் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் சாமுவேலை மடக்கி பிடித்தனர்.

கைது

அவரிடம் போலீசார் விசாரித்த போது, சாமுவேல் குடும்பத்தை பிரிந்து வசித்து வந்தாராம். இதனால் அவர் பழைய துறைமுகம் அருகே படுத்து தூங்கி உள்ளார். அங்கு ஏற்கனவே தங்கி இருந்த சிலர் சாமுவேலை கேலி செய்து உள்ளனர். மேலும் சாமுவேலை அங்கு உறங்குவதற்கு அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த சாமுவேல் கல்லை தூக்கி போட்டு அடையாளம் தெரியாத முதியவரை கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து போலீசார் முதியவர் இறந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி சாமுவேலை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்