சாலையில் தோண்டப்படும் குழிக்கு அருகில் தடுப்புகள் அமைக்கப்படுமா?
சாலையில் தோண்டப்படும் குழிக்கு அருகில் தடுப்புகள் அமைக்கப்படுமா?
திருப்பூர்
திருப்பூர் குமரன் சாலையில் இருந்து காங்கயம் செல்லும் சாலையில் நொய்யல் ஆறு அருகே ராச்சத சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் பெரிய குழிகள் தோண்டப்பட்டுள்ளது. ஆனால் சாலையோரத்தில் தோண்டப்படும் குழியை சுற்றி போக்குவரத்து தடுப்புகள், எச்சரிக்கை பலகைகள் வைக்கப்படாததால் பொதுமக்களின் பயணம் ஆபத்தான சூழ்நிலை உருவாகியுள்ளது. சில சமயங்களில் உயிரிழப்பு கூட ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும்.