அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் அரசு நிலத்தில் கம்பி வேலி அமைக்கும் பணி கலெக்டர் ஆய்வு

அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் அரசு நிலத்தில் கம்பி வேலி அமைக்கும் பணி கலெக்டர் ஆய்வு ெசய்தார்.

Update: 2023-02-15 21:54 GMT

நாகர்கோவில்:

அகஸ்தீஸ்வரம் தாலுகா வழுக்கம்பாறை வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள 1.24 ஏக்கர் அரசு நிலத்தினை ரூ.7.80 லட்சம் செலவில் கம்பி வேலி அமைக்கும் பணி நடக்கிறது. இதே போல வடக்குத்தாமரைக்குளம் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட 65 சென்ட் அரசு நிலத்தில் ரூ.5.20 லட்சம் மதிப்பில் கம்பி வேலி அமைக்கப்படுகிறது.

இந்த பணிகளை கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அரசுக்கு சொந்தமான பகுதிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என தாசில்தார் உள்ளிட்ட அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது உதவி கலெக்டர் (பயிற்சி) குணால் யாதவ், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராஜேஷ் உள்பட துறைசார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

--

Tags:    

மேலும் செய்திகள்