பனப்பாக்கத்தில் விபத்துகளை தடுக்க போக்குவரத்து சிக்னல் அமைக்கும் பணி

பனப்பாக்கத்தில் விபத்துகளை தடுக்க போக்குவரத்து சிக்னல் அமைக்கும் பணி நடந்தது.

Update: 2023-05-06 11:17 GMT

நெமிலி

பனப்பாக்கத்தில் விபத்துகளை தடுக்க போக்குவரத்து சிக்னல் அமைக்கும் பணி நடந்தது.

பனப்பாக்கம் பேரூராட்சியில் அரக்கோணம்-ஒச்சேரி செல்லும் சாலையில் உள்ள மும்முனை சந்திப்பில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன.

இதனை தவிர்க்க போக்குவரத்து சிக்னல் விளக்கு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக போலீசாருக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் இப்பணிக்கு சாலை பாதுகாப்பு நிதியிலிருந்து ரூ.3.40 லட்சம் மாவட்ட கலெக்டரால் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி அங்கு சிக்னல் அமைப்பதற்கான பணி நடந்தது. அதன்பின் சிக்னல் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு வாகன போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்