தடுப்புச்சுவர் கட்டுமான பணியை துரிதப்படுத்த வேண்டும்

பழனி-கொடைக்கானல் மலைப்பாைதயில், தடுப்புச்சுவர் கட்டும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Update: 2023-02-18 16:12 GMT

பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் பஸ், கார், வேன் என நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த மலைப்பாதையில் அபாயகரமான வளைவுகள் உள்ளன. இங்கு விபத்துகளை, தடுக்க தடுப்புச்சுவர் கட்டப்பட்டு உள்ளன. இதேபோல் விபத்து அதிகம் நடக்கும் பகுதிகளில் எச்சரிக்கை பலகை, எதிரொளிப்பான் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் சவரிக்காடு அருகே மண்சரிவு ஏற்பட்டது. அதையடுத்து அங்கு வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் மண் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டது. மேலும் சாலையோரம் உள்ள பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டு தற்காலிகமாக போக்குவரத்து தொடங்கப்பட்டது.

இந்நிலையில் மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீண்டும் தடுப்புச்சுவர் கட்டுமான பணிகள் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. அதாவது சாலை குறுகியதாக இருப்பதால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் தடுப்புச்சுவர் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்