கடையநல்லூரில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி

கடையநல்லூரில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

Update: 2022-12-22 18:45 GMT

கடையநல்லூர்:

கடையநல்லூர் நகராட்சி 25-வது வார்டு பஜார் சாலை, பெரிய தெரு, புது தெரு, அட்டை குளம் தெரு ஆகிய பகுதிகளில் கழிவுநீர் செல்வதற்காக பிரதான கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதை நகராட்சி தலைவர் மூப்பன் ஹபிபுர் ரஹ்மான் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரரை கேட்டுக் கொண்டார். மேலும் அரசு மருத்துவமனை பஸ் நிறுத்தம் அருகே கழிப்பிடம் கட்டுவதற்கான இடத்தையும் அவர் பார்வையிட்டார். அப்போது நகராட்சி பொறியாளர் லதா, ஒப்பந்ததாரர் ஹாஜா மைதீன், நகராட்சி கவுன்சிலர் முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்