ரூ.25 லட்சத்தில் பள்ளி கட்டிடங்கள் கட்டும் பணி

கட்டுமாவடி ஊராட்சியில் ரூ.25 லட்சத்தில் பள்ளி கட்டிடங்கள் கட்டும் பணியை முகமது ஷா நவாஸ் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2023-08-29 18:45 GMT

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி கோதண்டராஜபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் சேதமடைந்து இருந்தது. இந்த பள்ளி கட்டிடத்தை இடித்து விட்டு அதே இடத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணிகளை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கட்டுமான பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜவகர், ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், ஒன்றிய பொறியாளர் செந்தில் மற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்