ரூ.1 கோடியே 20 லட்சத்தில் சாலை, பூங்காக்கள் அமைக்கும் பணி
ரூ.1 கோடியே 20 லட்சத்தில் சாலை, பூங்காக்கள் அமைக்கும் பணியை நகரமன்ற தலைவர் தொடங்கி வைத்தார்.
ஆற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பஸ் நிலையத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் 70 அடி சாலை குண்டும் குழியுமாக காணப்பட்டது. இந்த சாலை நகராட்சி சார்பில் அடிக்கடி சீரமைக்கப்பட்டு வந்து. இதனை புதிய சாலையாக அமைக்க 15-வது நிதி குழு நிதியிலிருந்து ரூ.47 லட்சத்து 75 ஆயிரம், பார்த்திபன் நகர் பூங்கா அமைக்க ரூ.40 லட்சம், தனலட்சுமி நகர் பூங்கா அமைக்க ரூ.33 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். அதேபோல் ஆற்காட்டில் இருந்து ஆரணி செல்லும் சாலை பஜார் பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் சிறு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை நகர மன்ற தலைவர் ரிப்பன் வட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். நகர மன்ற துணைத் தலைவர் டாக்டர் பவளக்கொடி சரவணன், நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, பொறியாளர் கணேசன், தி.மு.க. மாவட்ட பொருளாளர் ஏ.வி.சாரதி, அனைத்து வணிகர் சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் பொன்.கு.சரவணன், நகரத் தலைவர் ஏ.வி.டி.பாலா, முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் பொன். ராஜசேகர் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், வியாபாரிகள் கலந்து கொண்டனர்.