இருவழிப்பாதையை 4 வழிப்பாதையாக மாற்றி சாலை அமைக்கும் பணி
திருவண்ணாமலை -அரூர் வழியில் உள்ள தானிப்பாடியில் இருவழிப்பாதையை 4 வழிப்பாதையாக மாற்றி சாலை அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறை அதிகாரி நேரில் ஆய்வு செய்தனர்.
திருவண்ணாமலை -அரூர் வழியில் உள்ள தானிப்பாடியில் இருவழிப்பாதையை 4 வழிப்பாதையாக மாற்றி சாலை அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறை அதிகாரி நேரில் ஆய்வு செய்தனர்.
சாலை அமைக்கும் பணி
தமிழக முதல்-அமைச்சரின் சாலை மேம்பாட்டு நிதி திட்டம் 2021- 22-ன் மூலம் தண்டராம்பட்டு உட்கோட்ட பராமரிப்பில் உள்ள திருவண்ணாமலை -அரூர் வழியில் உள்ள தானிப்பாடி சாலையை இருவழிப்பாதையில் இருந்து 4 வழிப்பாதையாக மாற்றி சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இத்துடன் அந்த பகுதியில் தென்பெண்ணையாற்றில் கூடுதல் பாலம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த பணியின் மொத்த மதிப்பு ரூ.120 கோடியாகும்.
அதிகாரி ஆய்வு
இந்த நிலையில் இன்று இப்பணியினை சென்னை நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் ரெ.கோதண்டராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணியின் விவரங்களை கேட்டறிந்தார். மேலும் இப்பணியினை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளர் எஸ்.பழனிவேல், கோட்ட பொறியாளர் கே.எஸ்.ராஜகுமார், கோட்ட பொறியாளர் (தரக்கட்டுபாடு) ஞானவேலு, உதவி கோட்ட பொறியாளர்கள் கே.தியாகு, ஆர்.இன்பநாதன் மற்றும் உதவி பொறியாளர்கள் பி.சசிகுமார், அஜய்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.