ரேஷன் கடை கட்டும் பணி மும்முரம்

குன்னூர் நகராட்சியில் ரேஷன் கடை கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-11-07 18:45 GMT

குன்னூர், 

குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட பெட்போர்டு பகுதியில் பழமையான கட்டிடத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வந்தது. அங்கு போதுமான இடவசதி இல்லாததால், ரேஷன் அட்டைதாரர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைக்க முடியாத நிலை இருந்தது. இதையடுத்து ரேஷன் கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டது. உழவர் சந்தை மேல் பகுதியில் புதிய ரேஷன் கடை கட்ட ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ரேஷன் கடை அமைக்க கட்டுமான பணிகள் தொடங்கியது. தற்போது பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த ரேஷன் கடை மூலம் அட்டடி, ப்ரூக்லேண்ட்ஸ், பெட்போர்டு உள்ளிட்ட பகுதி மக்கள் பயனடைவார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்