ரூ 4.75 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி
கயத்தாறு பேரூராட்சியில் ரூ 4.75 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நடந்தது.
கயத்தாறு:
கயத்தாறு பேரூராட்சி பகுதியான தெற்கு சுப்பிரமணியபுரம் காலனியில் பேரூராட்சி பொது நிதியிலிருந்து சுமார் ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நடைபெற்றது.
பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை தலைமை தாங்கி பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பஞ்சாயத்து துணைத் தலைவர் சபுராசலீமா மற்றும் தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன பாண்டியன் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.