பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி
சங்கரன்கோவிலில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நடந்தது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் நகரசபைக்கு உட்பட்ட 20-வது வார்டு காயிதே மில்லத் 2-ம் தெருவில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.
சங்கரன்கோவில் நகரசபை தலைவி உமா மகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். நகரசபை பொறியாளர் ஜெயப்பிரியா முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சரவணன், 20-வது வார்டு உறுப்பினர் ஷேக் முகம்மது, சுகாதார அலுவலர் பாலச்சந்தர், தி.மு.க. நிர்வாகிகள் பிரகாஷ், செய்யது அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.