புதிய மின்மாற்றி அமைக்கும் பணி

புதிய மின்மாற்றி அமைக்கும் பணி-அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்

Update: 2022-11-19 18:45 GMT

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை ஒன்றியம் பந்தல்குடி பூசாரெட்டிபட்டி தெருவில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு அங்கன்வாடி மைய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து சின்னாஞ்செட்டிபட்டியிலும், புலியூரான் கிராமத்திலும் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடங்களை அமைச்சர் திறந்து வைத்தார். மேலும் பாலவநத்தம் கிராமத்தில் புதிய மின்மாற்றியை திறந்து வைத்தும், அருப்புக்கோட்டை புளியம்பட்டியில் புதிய மின்மாற்றி அமைக்கும் பணிகளையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசுகையில், தேர்தல் நேரத்தின் போது. சொன்ன சொல்லை காப்பாற்றக்கூடியவர் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றார். நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர் சசிகலா, முன்னாள் ஒன்றிய தலைவர் சுப்பாராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது, ஒன்றிய செயலாளர்கள் பாலகணேஷ், பொன்ராஜ், ஊராட்சி தலைவர் பாலாஜி பத்ரிநாத், தாசில்தார் அறிவழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்