மாகாணிபட்டு ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டும் பணி

மாகாணிபட்டு ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்

Update: 2023-08-04 19:05 GMT

காவேரிப்பாக்கம்

மாகாணிபட்டு ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்

காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள மாகாணிபட்டு ஊராட்சிக்கு புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்ட தீர்மானிக்கப்பட்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.31 லட்சத்து 41 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து நேற்று புதிய கட்டிடம் கட்டும் பணியை கலெக்டர் வளர்மதி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். தொடர்ந்து கட்டளை ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் 2 வகுப்பறை கொண்ட கட்டிட பணியை பார்வையிட்டு விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

மேலும் அதே பள்ளியில் ரூ.5 லட்சத்து 17 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மாணவிகள் கழிப்பிட கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது காவேரிப்பாக்கம் ஒன்றியக்குழு தலைவர் அனிதா குப்புசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சையுப்தீன், வெங்கடேசன், உதவி பொறியாளர் ஏகநாதன், ஊராட்சி மன்ற தலைவர்கள் பிரமீளா ரவி (மாகாணிபட்டு), அலமேலு வெங்கடேசன் (கட்டளை) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்