லெவல் கிராசிங்கிற்கு பதிலாக சிறிய சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணி - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பில் அதிகமான கவனம் செலுத்துவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

Update: 2023-11-06 22:34 GMT

கோப்புப்படம் 

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-

தடையில்லா ரெயில் மற்றும் சாலை போக்குவரத்து பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் நோக்கில், சென்னை சென்டிரல் - அரக்கோணம் பிரிவில் உள்ள பட்டாபிராம் மற்றும் நெமிலிச்சேரி ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள லெவல் கிராசிங்குகளை அகற்றும் பணியை சென்னை ரெயில்வே கோட்டம் மேற்கொண்டுள்ளது.

இந்த இடங்களில் லெவல் கிராசிங்கிற்கு பதிலாக சிறிய சுரங்கப்பாதைகள் கட்டப்படும் பணிகள் தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக, லெவல் கிராசிங் கேட்டுக்கு பதிலாக ஒரு சிறிய சுரங்கப்பாதையின் கட்டுமானப்பணிகள் கடந்த நவம்பர் 4-ந்தேதி அன்று தொடங்கப்பட்டது. ரூ.4.5 கோடி மதிப்பிலான இந்த கட்டுமானப்பணிகள் 4 முதல் 5 மாதங்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை ரெயில்வே கோட்டம், பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பில் அதிகமான கவனம் செலுத்தி உள்ளது. இம்மாதிரி லெவல் கிராசிங்கை சிறிய சுரங்கப்பாதையாக மாற்றியமைப்பது ரெயில்வேயின் பாதுகாப்பு மற்றும் திறமையான செயல்பாட்டை உறுதிப்படுத்தும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்