உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி

கலவை அருகே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2023-03-11 18:17 GMT

கலவை

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஊராட்சி ஒன்றிய பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் கிராம பஞ்சாயத்து துறையில் செயல்பட்டு வரும் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் வளர்மதி ஆய்வு செய்தார்.

அப்போது கலவை அடுத்த கன்னிகாபுரம் சாலையில் உள்ள ரூ.4 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பால பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் இப்பணியினை உடனடியாக முடிக்க உத்தரவிட்டுள்ளார்.

அதைத்தொடர்ந்து டி.புதூர் கிராமத்தில் பொதுமக்கள் மாற்றுத்திறனாளி பயன்படுத்தும் ரூ.1.57 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் கழிவறையையும், பேராசிரியர் அன்பழகன் கல்வி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் டி.புதூர்கிராமத்தில் நடுநிலைப்பள்ளி பள்ளிக்கு ரூ.30.65 லட்சத்தில் கட்டப்பட்ட வரும் பள்ளி வகுப்பறையும் பார்வையிட்டார்.

அதைத்ெதாடர்ந்து திமிரி ஒன்றிய அலுவலகம் ரூ.3.43 கோடியில் கட்டப்பட்ட வரும் கட்டிடத்தையும் பார்வையிட்டார். கலவை அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டு அறிந்தார்.

ஆய்வின்போது மாவட்ட திட்ட இயக்குனர் லோகநாயகி, திமிரி ஒன்றியக்குழு தலைவர் அசோக், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயஸ்ரீ, சையத் ஷா நவாஸ், பொறியாளர் தனசேகரன், ஒன்றிய பொறியாளர் சரவணன், உதவி செயற்பொறியாளர் தியாகு, மாவட்ட குழு உறுப்பினர் சிவக்குமார், பொன்னமங்கலம் ஊராட்சி தலைவர் தண்டபாணி, டி.புதூர் ஊராட்சி தலைவர் கோகுல்ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்