விக்கிரவாண்டியில்ரூ.28 லட்சத்தில் அரசு பள்ளி கட்டிடம் கட்டும் பணிபுகழேந்தி எம்.எல்.ஏ. ஆய்வு

விக்கிரவாண்டியில் ரூ.28 லட்சத்தில் அரசு பள்ளி கட்டிடம் கட்டும் பணியை புகழேந்தி எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

Update: 2023-07-04 18:45 GMT

விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி கட்டிடம் சேதமடைந்து காணப்பட்டதால், அதனை இடித்து அகற்றி விட்டு புதிதாக கட்டிடம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன்அடிப்படையில் 2 வகுப்பறைகளுடன் கூடிய பள்ளி கட்டிடம் கட்ட விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.28 லட்சம் நிதி ஒதுக்கீடு, செய்யப்பட்டு, அதற்கான கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், பணிகளை தரமாகவும், விரைந்தும் முடிக்கவேண்டும் என அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் கள் சுமதி, முபாரக் அலி பேக், ஒன்றிய பொறியாளர்கள் இளையராஜா, நடராஜன், முருகன், ஒன்றிய செயலாளர்கள் வேம்பி ரவி, ரவிதுரை, ஜெயபால், கண்காணிப்பு குழு உறுப்பினர் எத்திராசன், ஒன்றிய கவுன்சிலர்கள் சாவித்திரி பாலு, செல்வம், ஊராட்சி தலைவர் சீனுவாசன், அமானுல்லா, பள்ளி தலைமை ஆசிரியை கீதா ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்