ரூ.1¼ கோடியில் சிமெண்டு சாலைகள் அமைக்கும் பணி
திருவண்ணாமலையில் ரூ.1¼ கோடியில் சிமெண்டு சாலைகள் அமைக்கும் பணியை நகரமன்ற தலைவா் ஆய்வு செய்தார்.
நகர்ப்புற வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் திருவண்ணாமலை நகராட்சி 37-வது வார்டில் உள்ள மணியாரி தெரு உள்ளிட்ட 4 இடங்களில் புதிய சிமெண்டு சாலைகள் அமைக்க ரூ.1 கோடியே 23 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது சாலைகளை தரமாக அமைக்க வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கினார்.
ஆய்வின்போது நகர செயலாளர் ப.கார்த்திவேல் மாறன் மற்றும் அக்கீம் சேட், பா.முர்பத், மகபூப் பாஷா, இப்ராஹிம் ஆகியோர் உடன் இருந்தனர்.