படுக்கை அணை கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்
வெண்ணாற்றில் படுக்கை அணை கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மெலட்டூர்:
வெண்ணாற்றில் படுக்கை அணை கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
படுக்கை அணை கட்டும் பணி
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகா, கொத்தங்குடி அருகே வெண்ணுகுடி தோட்டம் பகுதியில் வெண்ணாற்றில் படுக்கை அணை கட்டுவதற்காக அரசு ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில் கடந்த ஜனவரி மாதம் படுக்கை அணை கட்டுமான பணி தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு ஜூன் மாதம் 12- ந் தேதி டெல்டா மாவட்ட விவசாய தேவைக்காக மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளது. எனவே படுக்கை அணை கட்டும் பணியை தொய்வின்றி விரைவாக முடிக்க பொதுப்பணிதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
விரைந்து முடிக்க கோரிக்கை
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
இரும்புதலை, கோவத்தகுடி, நிம்மேலி, காந்தாவனம் உள்பட பல கிராம விவசாயிகளின் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு வெண்ணாற்றில் படுக்கை அணை கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்து, கட்டுமானப்பணியை கடந்த சில மாதத்திற்கு முன் தொடங்கியது. இந்த ஆண்டு மேட்டூர் அணை திறக்கப்படும் தேதி நெருங்கி வருவதால் படுக்கை அணை கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.