ரூ.37 லட்சத்தில் அங்கன்வாடி, நெற்களம் கட்டும் பணி
பின்னாவரம் ஊராட்சியில் ரூ.37 லட்சத்தில் அங்கன்வாடி, நெற்களம் கட்டும் பணியை ஒன்றியக்குழு தலைவர் தொடங்கி வைத்தார்.
நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட பின்னாவரம் ஊராட்சியில் சேந்தமங்கலம், பின்னாவரம் பகுதிகளில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டக்கோரி அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.29 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு 2 புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணியை நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து பின்னாவரம் பகுதியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிய நெற்களம் கட்டும் பணியையும் அவர் தொடங்கி தை்தார்.
இதில் பின்னாவரம் ஊராட்சி தலைவர் சிவ.மணிவண்ணன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் தீனதயாளன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில செயலாளர் ஆனந்தன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பவுன் சம்பத், பா.ஜ.க. ஒன்றிய தலைவர் சுந்தரமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.