போக்குவரத்துக்கு இடையூறாக கட்டுமான பொருட்கள்

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக கட்டுமான பொருட்கள் உள்ளது.

Update: 2023-04-15 18:45 GMT

கோத்தகிரி, 

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் அரவேனு பஜார் உள்ளது. இந்த வழியாக உள்ளூர் வாகனங்கள் மட்டுமின்றி, ஏராளமான சுற்றுலா வாகனங்களும் சென்று வருகின்றன. இதனால் அரவேனு பஜார் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இந்தநிலையில் தனியார் ஒருவர் மேற்கொண்டு வரும் கட்டுமான பணிக்காக பொருட்களை கொண்டு வந்து ஜக்கனாரை ஊராட்சி அலுவலகம் அருகே சாலையோரத்திலும், பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதை படிக்கட்டுகளிலும் கொட்டி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் சாலையின் அகலம் குறுகி போனதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. மேலும் கொட்டி வைக்கப்பட்ட எம்.சாண்ட் சாலையில் சிதறிக் கிடப்பதால், இருசக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே, அங்கு கொட்டி வைக்கப்பட்ட கட்டுமானப் பொருட்களை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்