ரெயில் மோதி கட்டிட காண்டிராக்டர் சாவு
ரெயில் மோதி கட்டிட காண்டிராக்டர் உயிரிழந்தார்
மதுரை மாடக்குளம் வி.கே.பி. நகர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 42). கட்டிட காண்டிராக்டரான இவருக்கு, முத்துமாரி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந்தநிலையில் நேற்று காலை சக்திவேல், ஆடு மேய்ப்பதற்காக பழங்காநத்தம் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, அந்த வழியாக வந்த மதுரை- போடிநாயக்கனூர் ரெயில் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சக்திவேல், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரெயில் மோதியதில் அவர் இறந்ததாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.